அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.
அகம் கொள்ளும் மரபணு படியும்
ஆக மொத்தமென வளரும் தரம்
உகந்த கால வரை அளவில்
வகுத்து கணித்து வெளி வரும்.
வரும் மெய் ஞானம் பெறும்
தரும் நிலம் புவி வளம்
பருப் பொருள் ஊடக மையம்
வருவாய் கொள்ளும் இயற்கை பங்கு.
பங்கு காட்சி தரும் வழிபாடு
அங்கம் மகிழும் வண்ணம் பண்பு
தங்கள் புரிதலும் நட்புமே உறவு
இங்கு வாழும் இறைமை என்க.