இனிய 2025 – புத்தாண்டு
‘அசை’ ‘அ’ன்பின் ‘சை’கைநிலைச் சொற்களாக மொழிதனில் நிலவுகிறது.
புவியின் திறன் யதார்த்தமாக – 2025
வாழ்த்தி, அசையும் நிலை மொழிதனை – இடைநிலை நேரக் காலத்தினை அறிந்து மகிழ்வோம்.
அசை
‘அசை’ நிலை சொற்கள் இடைநிலை நேரக் காலநிலை மாற்றத்திற்கான வழிமுறைகள் உள்ளன.
யாருக்கும் தெரியும் அசைவுச் சொல்லும் சொல்லின் இடைநிலைத் தன்மை அளவில் உள்ளது.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் இடையியல் 274 இலக்கிய பதிவில் உள்ள ‘அசை’ ‘அ’ன்பின் ‘சை’கைநிலைச் சொற்களாக மொழிதனில் நிலவுகிறது.
‘யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்
ஆயேழ் சொல்லும்
அசைநிலைக் கிளவி’
யா கா பிற பிறக்கு அரோ போ மாது எனும் ஏழு இடைச் சொற்களும் அசைநிலைச் சொற்கள் ஆகும்.
” ‘யா’வும் ‘கா’க்கும் ‘பிற’ப்பில் ‘பிறக்கு’ம் ‘அரோ’ராவின ‘மாது’வினிடையேயாம். ”
என்பனார் புலவர்.
சொல்லசை முதல்வரி இடைநிலை சொற்களில்
நல்லிணக்க வகைதனில் பதிவோம்.
யா:
யாரையும் இணைக்க முடியும் என
யாவருக்கும் இனி வரும் வழியில்
யாதும் ஊரும் உயிரியல் தோற்றம்
யாருக்கும் பொருந்தி மலர்ந்து காக்கும்.
கா:
காக்கும் படை இலக்கு வழிவழி
காலைமுதல் மாலைவரை உணவுத் தேடல்
காப்பதும் வேண்டும் என்பதே முடிவு
காட்டும் நிலநீரமைப்பு உயிர்ப் பிறப்பு.
பிற:
பிறப்பும் வளர்ப்பும் பிறவிச் சேர்க்கை
பிறகு பழகும் வாய்ப்பும் உண்டு
பிறவிப் பயனை அடையவும் முடியும்
பிறந்த இடம்பெற்ற கலைகளில் பிறக்கும்.
பிறக்கு:
பிறக்கும் போது கூடிய தாயனை(DNA)
பிறக்கின்றத் தொடர்பில் பற்றும் வரவும்
பிறக்கும்போதே வேண்டிய நிலைச் சேர்க்கை
பிறக்கும் அகவை ஆரிராரோ அரோ.
அரோ
அரோரா எனும் சொல்லும் தன்மை
அரோ என்ற உயிரின விளைச்சல்
அரோகரா என அழைப்பது முற்றிலும்
அரோ வில் உள்ளவை அசையும் போதும்.
போ:
போதும் என்ற நிலை உதவும்
போக்கும் வரவும் இருப்புநிலைக் குறிப்பு
போவதும் வருவதும் உண்டு என்பதாகும்
போதுமென தலைமுறை பிறப்பில் மாது.
மாது:
‘மாது’ ‘மா’ற்றத்தின் ‘து’றைத் துணை
‘மாது’ எனும் ‘மா’பெரும் ‘து’றைத்தலைவர்
‘மாது’ என்றதோர் ‘மா’றியத் ‘து’கள்கள்
‘மாது’ உளக்கனிவே ‘மா’நிலத் ‘து’றைபொறுப்பு.