இருமை பொருண்மை உணரும் காலநிலை

இருமை பொருண்மை உணரும் காலநிலை

அண்டவெளி பருமை

இயங்கும் படைச் சுற்று இயக்கம்
இயங்குகிற எரிபரவல் பேரண்டம்.

இயங்குபடைக் கருமை இருமை‌ இயக்கம்
இயக்கிய எரிபரவல் ஓங்கிய உருகெழு
இயக்கத்தில் வரும்விசை எரி தழல்
வயங்கல் எய்திய கொடை மையம்.

மையவிழி விளக்கத் தோற்ற உடைமை
மேய வரும் கனிமச் சேர்க்கை
மாயவிழி மையல்கருப் பொருள் கொத்து
பாய நெடுங்கலம் மண்டலச் சுற்றுலா.

சுற்றும் சூழல் வேற்றுத் தர வேதியியல்
பற்றிய யாவும் நாடி சுழலும்
கற்றைக் கற்றையாய் சுருண்டு உருளும்
மற்ற நில்லாப் புணரி குழல்.

குழல் வடிவ வட்டச் சுற்று
வழங்கும் பார்வை கொண்ட புலம்
பழகிய பரவலே காணும் காட்சி
மழலை மொழியில் கண்டவை பேரண்டம்.


அண்டவியல் முன்னோடி

பொதுவான சார்பியல் விதிகளின் படிமலர்ச்சி

மையத்திரள் கருந்துளையைச் சுற்றி வரும் 100 பில்லியன் நட்சத்திரங்களின் விண்மீன் மண்டலத்திரள் என பதிந்து உள்ளனர்.

ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் எட்டும் சுழலும் மற்றும் சாய்ந்த கோள்களில் ஒன்றை நாம் ஆக்கிரமித்துள்ள மனித நிலை, விரிவடைந்து வரும் நமது படிமலர்ச்சி நிலையில் உள்ள 200 பில்லியன் விண்மீன் திரள்களில் ஒன்று.

ஒவ்வொரு படிநிலையாக, காலப் போக்கினை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கால மனிதர்களின் படிநிலை பேரண்ட அறிவியல் கண்ட நிலையினை தொகுப்பு காலநிலை மாற்றத்தினை அறிவோம்.
கருநிலை மதிப்புறு முழுமை பெறாத நிலையில் உள்ளது.

இருண்டநிலை மற்றும் இருண்ட ஆற்றலை தொலைநோக்கில் கண்டு அறியப்படாத ஒன்றாகும்.

ஒளியின் மூலம் ஐந்து விழுக்காடும், இருண்ட பொருளாக 27 விழுக்காடும்,
68 விழுக்காடு இருண்ட ஆற்றலாக உள்ளது என தற்கால நிலை அளவில் அறிவியல் கூறுகிறது.
ஒளியானது விண்வெளியின் வெற்றிடத்தின் வழியாக நேர்கோட்டில் பயணிப்பதன் மூலம் பேரண்டம் முழுவதும் பரவுகிறது.


இருமை பொருண்மை உணரும் காலநிலை

கருநிற நிலை கொண்ட மையம்
இருமை பொருள் உணர்த்தும் வகையறிவு
அருமை அன்பின் ருசிகர மையமாய்
பெருமை பெரும் பிரிவில் பேரண்டம்.

பேரண்டம் பேசும் அண்டவெளி பருமை
ஆரமாய் இருப்பிட கருப்பொருள்(27%) திரட்டு
ஓரமாய் வைத்து ஒதுக்கிய வெளிச்சம்(5%)
தூரமாய் இருக்கும் கருமையின்(68%) ஆற்றல்.

ஆற்றல் மிகும் சொல்லில் விளங்கும்
உற்றுப் பார்க்கும் உயிரின வாழ்வும்
பற்று கொண்டு பதறும் வெளிச்சம்
கற்றலில் நின்ற பேரண்ட அதிர்வு.

அதிர்வில் சுழன்ற கருமைய திரட்சி
உதித்த இயக்க அண்டவெளி பருப்பொருள்
கதிரொளி வீச்சில் சுழற்சி முறை
பதிந்த கருத்தில் விண்திரள்களின் சுற்றுலா.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்