உயிரகப் பூ: பூக்கள் பூக்கும் தருணம் புவி ஆக்கம் தரும் நேரம் நன்மலரே பக்குவம் பெறத் துடிக்கும் துவளும் ஊக்கத் தோற்றம் உடைமை உயிரினம். உயிரின் கோர்வை உலக மலர்ச்சி பயிரின் தன்மை உள்ள வளமை பயிற்சி ஆகும் அதனதன் தாயனை ஐயிராண்டு மனிதக் கருவே மெய். மெய்யுறு தொடரனை தொடரின உயிர் உய்ய உயர உறுதி கொள்ளும் ஆய்ந் தெடுத்த வகைகள் வரிசையுறும் எய்தப் பெறுதல் உள்ளகப் பெறும். தளை(பாசம்) கொண்ட நேர்மை விழையும் ஆளை உருக்கும் இருக்கும் இன்பம் வளை கொள்ள மையலில் மயக்கும் துளையிட கூர்மை பயணத்தை தொடுக்கும்.