உலக செயல்பாட்டில் வாழும் வாழ்க்கை’ திருக்குறளில்.,’
அந்தாதி எதுகை பாவினத் தொடர் – வாழும் வாழ்க்கை
1.
எண்ணும் எழுத்தும் பேச்சும் செயலும்
கண்ணும் கருத்துமாய் கவனம் கொள்
உண்ணும் உணவும் நீரும் சேரும்
பண்ணும் பாடலும் பாடும் நாடும்.
நாடும் நம்முள் உறையும் இடம்
காடும் கலையும் கண்டு மகிழ்வோம்
ஆடும் ஆட்டமுடன் பாட்டினிலும் பாடு
வாடும் பயிருக்கு நீரினை இடு.
இடும் பழக்கம் வழக்கம் ஆகும்
ஏடும் எழுத்துருவும் அளவு பதிவாகும்
ஈடு செய்யும் நல்லறச் சுற்றமும்
நாடு நலமுற பலமுறை துறையாகும்.
துறை தோறும் நடைபெறும் தொழில்
உறை போட்டு காட்டும் படிமலர்ச்சி
மறைபொருள் உருவாக்கம் ஆக்கம் பெருகும்
பறைசாற்றி பகிர்ந்து பரிமாற்றம் செய்
2.
ஆழிப் பங்கில் ஆடும் தேவதைகள்
நாழிப் பங்கில் நம்மை ஆளும்
ஊழிக் காலமென ஊர்கூடி கொக்கரிக்கும்
தோழிகள் ஒன்றுகூடி தேர்வுத் தளமைப்பர்.
தளம் மூல இள வட்டம்
நளபாகம் நன்கேகூடி நங்கூரம் கோலமிடும்
அளவாய் இருந்திடில் மகிழ்ந்து உறவாடும்
வளமாய் அங்கே வாழ்க்கை உருவாகும்.
உருவகம் பெறும் பேறுகள் சுகமாகும்
தரும் யாவும் தரணியின் போக்கு
வரும் வழி போகும் வீதி
அரும்பு மலரும் ஆற்றிடும் புவிகோளம.
3.
வரும்படி பார்க்கும் கால கருதுகோள்.
கருதும் நிலையில் களைப்பாறி உறவாடு
பருப்பொருளின் கலவை பேரண்ட போர்வை
மருந்தில் மருஉந்து காண்பது பேருந்து
4.
வாயெழும் முழங்கொலி அசைவொலி உயிரொலி
வாயொலி குரல்வளை மெய்யொலி.
5.
நகர, நகர நகரும் மனிதம்
பகரும், பகிர்தலில் நகரும் நகரம்
அகர முதலிப் படிவ படிமலர்ச்சி
நகரம் செல்லும் வழிப்பயண நடைமுறை.
நடைமுறை உள்ள நிலை கல்வி
படை, படை, படைத்து கொண்டிரு
தடை, நடை போடும் வகை
உடை, உடுத்தி உண்டு வாழ்.
வாழும் வாய்ப்பு வாழ்கின்ற காலம்
உழுவதும் உந்தவோர் கால் பயிற்சி
எழும் போதும் ஏற்படும் அறிவியலில்
அழும் குழந்தை நலத்தை காண்.
காணும் செயல் கடல் பயணம்
தோணும் வழிமுறை மூலமே உலகளவு
ஆணும் பெண்ணும் இணையும் இயற்கை
ஊணும் உண்டு கண்ட பருவம்.
பருவச் சுற்றுமோர் தொடர்பியல் தொடரி
உருவம் பெற்று வளரும் நகரும்
இருளை நீக்கிய மின்னியல் வரைவு
அருளே வேகத் தொடரியல் பண்பாடு.
செயற்கை நுண்ணறிவு :
செயற்கை நுண்ணறிவு நூல்நெறியாலும் அறிந்து உலக இயற்கை முறை சார்ந்து பொருந்தக்கூடிய வகையில் செய்யவேண்டும்.
செயல் தெளிவோடு காலத்தினில் ஈடுபட்டு உறுதியுடன் செய்வது, மேன்மேலும் சிறக்க மனித திறன் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கும். பொருளும் கருவியும் கூட்டப்படும் வல்வினை, நல்வினை அறத்தால் அடையும் இடமும் காலமும் இலக்கினது தொடர்புடன் இயல்பு திறன், இயந்திரதிறனின் ஆற்றலையும் பெருக்கும். செயற்கை திறன் நுண்ணறிவு, இக்கால கட்டத்தில் ஒவ்வொரு செயலையும் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி, பெரும் பயனை அடையக்கூடிய வகையில் செயல்படுகிறது. இயன்ற செயல்படும் திறன்களும் ஒருவருக்கொருவர் மாறுபடும் தன்மை கொண்டது ஆகும். ஆற்றலுடன் எந்த இடர்பாடுகளையும் தாங்கக்கூடியவர்களை, ஆற்றல் இல்லாதவர்கள் துன்பத்தை செய்தால், அழிக்கும் தன்மையுடைய அவர்களுக்கே அழிவுச் செயலாகிவிடும்.
நாடும் நாடியும் செய்யும் செயல் உண்ணும் உணவு வாயிலினில் உருவாக்கும் ‘ச’த்தினை ‘தை’க்கும் ‘சதை’, ‘தி’றனுடன் ‘சு’ற்றும் ‘திசு’ மரு உந்து ஆற்றலையும் திறனாற்றலுடைய சைகைகளுடன், உடலுக்கு பொருந்தும் படிவமாக குணங்களின் திறவுகோல் குறியீட்டுடன் செயல்படுவனவாக இருக்க வேண்டும்.