ஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்! ஒன்றாய் சேர்ந்த புவி பிரிந்து நன்றாய் கண்டமாய் சுற்றும் சுழல் கன்றாய் இருந்த கோள் துண்டாய் நின்றாய் நகர்ந்தாய் சுற்றினாய் நாடானாய். நாடி ஓடி ஓடும் ஓட்டம் துடி துடித்து நாடும் ஆகும் வாடி செழிக்கும் பயிரும் நீரில் ஆடி குலுங்கும் அழகே அழகு. அழகாய் சிறகாய் பறக்கும் பறவை மழலை மொழி செல்லின் திறன் பழகி பேசும் நேசத்தின் இயல்பு உழவன் நிலமே உயிரைத் தேற்றும். தண்டு கொண்டு வென்று சென்றாய் கண்டு பிடித்து கசக்கி பிழிந்து உண்டு உயிர்த்த நாளின் போக்கும் ஆண்டு பலவாறு உதயமாய் சுழலும்.