ஒரு நொடி பா ‘அண்டவியல்’
தொன்மை வரலாற்று வரையறை அண்டவியல்
பன்முக படிமலர்ச்சி நிலையறிவு.
நடும் நடவு நட்ட பயிர்
கூடும் நடவியல் கணக்கு வைப்பு
தேடும் நடல் உள்ள மாநிலம்
வாடும் பயிர் செழிப்பை நாடும்.
நாடும் வீடும் நகரில் நகரும்
பாடும் பாடலும் பாடுபொருளே பாடசாலை
நாடுவதே நாட்டின் குறிப்பிட்ட செயல்
காடும் மேடும் கவனிப்பதே ஆட்சிமுறை.
ஆட்சிமுறை மாட்சி மாண்பு உடைமை
காட்சி கருத்து கணிப்பு முறையீடு
மாட்சிமை
உட்படும் மக்களின் உடைமையே குடியரசு
ஆட்சியின் தேவை தேர்ந்தெடுத்து வைப்பதே.
வைப்பு முறை இலக்கு குறியீடு
இப்பகுதியோர் புரியவே மாநிலத்து கல்வி
ஒப்பித்து படித்தவை உள்ளத்தில் நிலைக்கும்
அப்படி படிப்பதே எக்காலமும் சென்றிடும்.
சென்றிடும் செயல் திறன் என்றும்
நன்மை தரும் வாழ்வு முறை
தொன்மை வரலாற்று வரையறை அண்டவியல்
பன்முக ஆற்றலில் படிமலர்ச்சி நிலையறியும்.