ஒரு நொடி பா ‘அரண் ‘
ஒரு நொடி பா ‘அரண்’
நிலவரண் நீரரண் மலையரண் இயற்கையரண்
காலநிலை மதிலரண் செயற்கையரண்.
இயற்கை நீரரண் நிலவரண் மலையரண்
செயற்கை நீரரண் அகழி உயர்மதிலரண்
இயல்பு திறன்சார் அகன்மதிலரண் திண்மதிலரண்
உயர்வு அகலத் திண்மை அருமதிலரண்.
அருமதிலரண் இங்கே அமைக்கும் வரையறை
பெரும் வகை நிலவகை பொறியியல்
ஆருயிர் நண்பர்காள் அகத்தவம் சிறப்பு
கருப்பொருள் தூண்டலின் காலநெறி முறைமை.
முறைமை மண்ணியல் கைப்பற்றும் மானிடவியல்
உறைவிட இறுமாப்பு பெருமிதக் களிப்பு
அறையடி வாழ்விடம் நிறைவிட இருப்பிடம்
பறையடிச் சொல்லும் முரசொலி வட்டம்.
வட்டம் வடிவச் சுற்றும் சுற்றுலா
திட்ட வடிவமே வரலாற்று புவியியல்
பட்டம் பெறும் துறைசார் நிகழுரை
வட்ட வடிவ வாழ்வியல் கற்றலே.