ஒரு நொடி பா – இருக்கை
ஒரு நொடி பா ‘இருக்கை’
‘எம்’ ஒரு நொடி பாவினம்
‘ஆம்’ பாவின சொல் வடிவம்
‘உம்’ உள்ள பதிவும் வெளியிடும்
‘நம்’ மொழி உயிர்நாள் வரை.
வரையறை வட்ட வடிவ அமைப்பு
தரையில் அமர்ந்த காலம் ஒன்று
நரை கூடியப் பருவமும் சொல்லும்
இரை தேடியும் உணவு உண்டோம்.
உண்ண உணவு பெற
பயிற்சி
மண் வளம் காக்கும் பயிர்வகை
கண் விழி பார்த்த அறிவியல்
உண்பதும் உடுப்பதும் உறைவிட மும் குகை.
குகைப் பாறையடி குடி இருப்பு
வகை நிலம் நீர் வளமை
பகை கருத்தில் மாநில எல்லைக்கோடு
தகை தடுத்து கையாளுதல் மையகருத்து.
மைய கருத்துரை காலந்தோறும் மாறும்
இயல்பு நிலையிடம் திரும்பும் வழி
இயற்கை வளமே அறிவுசார் தொடர்பு
வயலும் வாழ்வும் பாறையும் ‘இருக்கை’.
‘இருக்கை’ பாறை உட்காருமிட மொருநாள்
உருவாகிய வகை நிலை மாறி
பருவ மழை நீருக்கும் அளவுமானி
மரு உந்து நீரும் உயிர்ப்பு.