ஒரு நொடி பா ‘உயிரிசைவு’
கற்றலில் தரும் நம்பருவ மதிப்பு
பற்றும் இலக்கிய ‘உயிரிசைவு’.
‘க’ற்றல் ‘த’ரும் ‘ந’ம் ‘ப’ருவம்
‘ம’ற்றவை யகத்தில் உயிரொடும் செல்லும்
‘க’ற்றவை ‘த’ந்த “ந’ம்முயிர் ‘ப’ற்றியவை
‘ம’ற்றுமோர் ஐவ்வகை மெய்களின் ‘உயிரிசைவு.’
‘உயிரிசைவு’ பன்னிரண்டு எழுத்துரு மொழிமுதலே
உயிரெழுந்த அசை கனிவாக காத்து
உயிரோடு இருக்க மொழி முதல்
ஆயினும் ஒற்றிய நகரமிசை இறுதி வரையறை .
வரையறை மூலம் பேசும் தன்மை
தரை தளம் தோற்றமே மூலம்
திரைப்பட வசன நடைமுறை உள்ளவையும்
வரைபடம் கொண்டே கடக்க முடியும்.
முடியும் முகப்பு முதன்மை பொறுப்பும்
விடிந்து செல்லும் விரிவுப் பார்வை
முடிந்தவை தொகுத்த வடிவமைப்பே ஊரும்
படிக்கும் போதே கற்பித்தலும் தொழில்திறன்.
குறிப்பு:
தொல்காப்பியம்
எழுத்ததிகாரம்-61
கீழ்க்கண்ட எமது
முகநூல் பதிவில்
22 Feb 2023 விளக்கத்துடன்
‘கதந பம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடுஞ் செல்லுமோர் முதலே.’
‘கதநபம’
எனும் ஐந்து
மெய் எழுத்துக்களும்
எல்லா உயிரெழுத்துக்களோடும்
சேர்ந்து
மொழிக்கு முதலாக வரும்.
‘க’ற்றுணரும்
‘த’மிழ் மொழியில்
‘ந’ன்றியுடன்
‘ப’க்கத்திலே
‘ம’ங்கா
மெய்யெழுத்தில்
உயிர் ஐந்தெழுத்தோடு
செல்லுமே முதலே.
உயிரிசைவு –
பொருள்:
உயிரகத்தோடிணைவு.