ஒரு நொடி பா ‘கனவு’
செல்லானவையின் உல்லாச நினைவலையே கனவு!
நில்லாது நிலைக்காது செல்லாதவையே .
நினைவு பல தோன்றும் காட்சி
உனை காண வைக்கும் சாட்சி
கனை போல் தொடுக்கும் அலைவரிசை
எனையும் உனையும் எதையும் இணைக்கும்.
இணைப்பது யாவும் தொடராத எல்லையே
ஆணையிடும் உலகின் பல்வேறு படக்காட்சியும்
அண்மை நிகழ்வு எதிலும் இல்லாதவை
உண்மை என்பதே செல்லாத படத்தொகுப்பு.
படம் முழுக்க உள்ளது எல்லாம்
அடம் பிடித்து சொல்லும் கதையுமல்ல
இடம் பொருள் ஏவல் வினை
கடந்து சென்று அந்த நேரத்தொடரே.
நேரத்தொடரும் இரவு பகல் பாராது
தூரத்தில் உள்ளவையும் உள்ளத்து போலியே
நரம்பியல் இணைக்கும் நினைவின் இயல்பு
மரபியல் நினைவில் நல்லதை நாடுவோம்.