ஒரு நொடி பா ‘தேவை’
உளம் நிறைந்த உணவுப் பொருளும்
ஆள வேண்டிய தேவை.
நாட நாடும் நாளின் போக்கு
ஓட ஓடும் ஒட்டிய உயிர்
பாட பாடும் பாடலின் பாட்டு
ஆட ஆடும் ஆட்டமே புவித்தட்டு.
புவியின் மேல் நிலத்தில் கடலும்
புவி ஈர்ப்பு கட்டம் இனிதே
கவிதை வீதியில் உள்ள கட்டளை
அவியல் ஆவியில் இட்லியும் உண்டு.
உண்டு உயிர்த்து வாழும் வாழ்க்கை
கண்ட புவியடி நகர்வில் நகரம்
கண்காட்சி உள்ளத்தில் ஊடும் புள்ளி
பண்பாடும் தகவல் தொடர்பில் தொழில்.
தொழிலக வழக்கம் பழகும் வாய்ப்பு
வழி நெடுக இயங்கும் புவியடி
எழில் மிகு தோற்றப் புவியும்
வழியெங்கும் நகரும் சாண் அளவு.
அளவு ஆற்றலில் இயங்கி நகரும்
உளம் நிறைந்த உணவுப் பொருளும்
ஆள வேண்டிய தேவை உள்ளது
வளம் காத்து வாழ்வோம் புவிதனில்.