ஒரு நொடி பா ‘நிலை’
விந்து சென்ற நிலைக் கருமுனை
வந்து சேர்ந்த செல்லினக்கூடு.
தென்றல் வந்து தீண்டும் போது
இன்பம் கோடி தரும் வாழ்வு
உன்னைநான் சந்தித்த நாள் முதலே
நன்கு கூடிய பார்வை கூறும்.
கூறுகள் மாறும் போதும் நின்
ஆறுதல் தேர்வில் முழுமை ஆக்கும்
மன்றம் கூடி மகிழும் வண்ணம்
கன்னி கனிந்த பூவினத் தோற்றம்.
தோற்றப் பொலிவு பெறும் தருணம்
கற்றுக் கொள்ள பள்ளியறைப் பாடம்
பற்றும் இலக்கு எல்லை மீறும்
மற்றும் சிலநேரத் துளியில் வித்து.
வித்து கருக் கலந்த உறவும்
சத்து உள்ள சதை துடிப்பு
பத்து இலக்க போதிய அளவு
ஒத்து கொண்ட சான்று நிலை.