ஒரு நொடி பா பயிற்சி

ஒரு நொடி பா பயிற்சி

வன்மை மென்மை தரும் பயிர்கள்

பன்மையின் தன்மை நன்மை.

வன்மையுள் வலிமை பயிற்சி மூலம்
நன்மையில் பழகும் பண்ணும் பாடும்
தொன்மையில் விருந்தோம்பலை தொடுக்கும் குறளடி
பன்முக ஆற்றலில் பொறுப்பும் இருப்பு.

இருப்பு இரும்பு பாதை வழித்தடம்
வருவதும் போவதும் போக்குவரத்து வழிவகை
அருமை அன்பின் ருசிகர மையம்
இருப்பில் வழங்கும் கருத்துக் கோவை.

கோவை கோர்க்கும் வையக நோக்கு
பாவை பார்த்து வைக்கும் தையலகமுகில்
அவை அன்பினில் வையகம் வாழ்ந்திட
நாவை நாடும் வையகத்தில் மொழிந்திடுவோம்.

மொழிந்திடும் நுண்ணறிவு செயல் திறன்
வழிவழி வந்த மரபுசார் வடிவம்
மொழியறிவு மென்மை தரும் மென்பொருள்
வழிபாடு செய்யும் பொறுப்பில் இருப்பிடம் .

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்