ஒரு நொடி பா பொங்கல் வாழ்த்து
ஒரு நொடி பா ‘பொங்கல் வாழ்த்து’
பொங்கல் வைத்து தொடரும் பண்ணும்
தங்கள் நரம்பொலி வாசிக்க கேட்க
அங்கம் எங்கும் தங்கி மலரட்டும்
பங்கு போட்ட கருத்துக் கணிப்பு.
கணிப்பு முறை இலக்கு குறியீடு
திணிவு மைய கோட்பாட்டுச் சூழல்
பணிவு கொண்டு பேசும் வாழ்த்தும்
தணிந்து பேசி நிற்கும் காட்சி.
காட்சி யாவும் நாடிக் கூடும்
நட்புத் தேர்வு செய்யும் முறை
எட்டிப் பிடித்து காட்டும் வரைகோடு
கட்டிப் பிடித்து மலரும் பாசக்கோடு.
பாசப் பறவை தேடல் வழி
நேச வசம் நிலை மதிப்பு
எசப்பாட்டு ஊர்கூடி பார்க்கும் பார்வை
வாசகர் அகத்தில் அகரம் சிகரமாகும்.