ஒரு நொடி பா ‘மகிழ்’
கொடுப்பவரும் தருபவரும் பற்று-வரவு விதியில்
உடுத்தி உண்டு மகிழ்வர்.
கொடுப்பது எல்லாம் நிலைப்பதில் எங்கும்
தடுப்பதில் எப்படி இறுக்கி பற்றும்?
நாடுவதும் வழங்குவதும் உயிரின வாழ்வு
உடுத்தி உண்டு மகிழவே உலகம்.
உலகம் உண்ட பின் உண்
கலகம் தொடுத்து நாடுவது ஏனோ?
உலகியல் நிலமும் வளமும் இயற்கை
நலமுடன் தந்த கொடையே புவியியல்.
புவியின் இயல்பில் ஒளிரும் பார்வை
ஏவிக் கணைத் தொடுப்பு வெற்றியா?
காவியம் படைத்து காணியை ஆள்வது
தவிக்கும் உன்வாய்க்கு தருவது ம் புவி.
புவியினை அழித்து போரிடுவதும் பேரிடரே!
கவிதை காவியத்தில் திரை வீதியில்
ஏவிச் செல்லும் புகழின் உச்சியும்
ஓவிய வரையறையே பதவியும் புகழும்.