ஒரு நொடி பா ‘மடங்கு’
ஆக்கம் அறிவு உடைய மடங்கும்
ஊக்கம் உருவாகும் உருவகம்.
எம்மடங்கு வளைந்து சென்றும் பின்பற்றும்
மும்மடங்கு வெளிப்புற தோற்றப் பொலிவு
உம்மடங்கு சொல்லும் பொருள் வளமிகும்
அம்மடங்கு கீழ் படிந்ததே நம்மடங்கு.
நம்மடங்கு பெருக்கி வளரும் மதிப்பு
தம்மடங்கு மூளும் மூளை நரம்பியல்
ஐம்மடங்கு வளைவு நெளிவு சுழற்சி
இம்மடங்கு சொல்லாற்றல் அறிவதே அறம்.
அறம் பொருள் இன்பம் ஆக்கம்
திறவுகோல் குறியீடு கருத்து கணிப்பு
பறவையும் பறக்கும் விதியும் விண்வெளி
திருப்பம் ஏற்கும் புவியியல் போக்கு.
போக்கு வரவும் செலவில் நிலைக்கும்
நாக்கு மெல்லப் பழகும் வாய்ப்பும்
ஆக்கம் அறிவு நெடிய வரலாறு
ஊக்கம் உடைமை மாற்றும் உருவகமே.