ஒரு நொடி பா – வட்டி

ஒரு நொடி பா: வட்டி
ஒரு நொடி பா : வட்டி

வட்ட வடிவ வணிகப் பிரிவில்
இட்ட பன்னாட்டு வாணிகம்.

வட்டி காட்டும் வட்டப் பொருள்
தட்டில் கொண்டு சென்று விற்றவை
எட்டுத்தொகையுள் பதிவு செய்த குறுந்தொகை
பாட்டியலில் பயன்படுத்திய ஒரு குறிப்பு.

குறியீடு மாறிய பின் வேட்டுவனும் சுட்டியவை
குறிப்பு வடிவில் வாகைத் திணை
குறித்த பாடலும் தயிருடன் விற்பனை
குறிப்பிடம் பலவாறு சொல்லும் தன்மை.

தன்மை பெற்று உழவும் தொழிலும்
நன்மை தரும் வரலாறு கூறும்
என்றதொரு அகம் புறம் உள்ளதொரு
ஒன்றிய பன்னாட்டு ஏற்றுமதி கண்டுகொள்க.

கண்டு இன்புற்று வாழ்க வளமுடன்
கண்டத்தில் தோன்றிய கால முறை
உண்டு என்றும் சிறக்க மூலவுரை
பண்டு பலவாக நின்றவை பலகோடி.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்