ஒரு நொடி பா ‘வரியேற்றம்’
‘வரையறை கொண்ட புவி இயல்பில்
தரையடிக்கும் வரி ஏற்றம் ‘
ஏய்த்து வாங்கும் வரிவிதிப்பு மதிப்புறாது
காய்த்து கனிவதே மதிப்பு.
**
இடைவெளி இல்லா மேற்கூரை மின்னாற்றல்
தடையில்லா மின்சார தானியங்கி பயிற்சி
படை கொண்டு தாக்கும் நாடு
நடைமுறை பயன் தான் ஏது?
ஏதும் இல்லாது ஏந்தி நிற்கும்
காதும் கேட்காத துளை இயந்திரம்
யாதும் ஊரே என்றே நாடு
போதுமென புரியாத புவியில் போர்படை.
போரின்றி இயங்காதோ புவி மேலே
யாரின்றி இயங்கும் இயற்கை வளம்
ஊரின்றி இல்லாத மனிதவளம் ஏது?
ஊரினப் பயிர் தொழில் வளர்ச்சி.
வளர் மதிப்புறு முழுமை பெறவேண்டி
உளவும் வரியில் ஏற்றமும் தொல்லை!
வளமும் நலமும் பெறவே உயிரினம்
அளவும் நிறைவில் பழகும் வாய்ப்பு.
வாய்ப்பும் வேலையும் மூலமென அறிவாய்
காய்கறி தோட்டம் கனியும் பழமும்
வாய்மொழி உயிரின வகையில் மனிதம்
ஏய்த்து வாங்கும் வரிவிதிப்பு மதிப்புறாது.