#ஒரு_நொடி_பா #நல்லறம்

#ஒரு_நொடி_பா #நல்லறம்

இல்லறம் இனிக்க நம்
தொடர்
சொல்லறம் சொல்லி விளங்க முடியும்
இல்வாழ்க்கை அமைய உள்ளம் தரும்
நல்லவை நாடிய நரம்பியல் வைக்கும்.

வைக்கும் இடம் பெற்ற சுற்றுலா
தைக்கும் வையகச் சுழற்சி முறை
ஊக்கம் பெற்ற புரதப் புதுவிசை
தாக்கத்தின் வாய்ப்பு பண்பினில் சிறக்கும்.

சிறந்த அவை அன்பினில் சுரக்கும்
பிறந்த இடம் பெற்ற மொழியில்
பறந்து சென்று பற்றிக் கூறும்
அறம் ஆக்கம் அறிவியல் ஆற்றலுறும்.

ஆற்றல் ஆறுதல் கூறிய மரபணு
கற்றலில் கண்ட தலைமுறை நிலைப்பாடு
பற்றிய யாவும் நாடிய ஒற்றுமை
தொற்றியத் தொடரிணைவு ஆறனைச் சேர்க்கை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்