எல்லைக் கோட்டில் புவி வளையம்
கொல்லைப் புறத்தில் தோட்ட அமைப்பு
கல்லைக் கொண்டு கட்டிடும் வீடு
தொல்லை செய்யாதே புவிதளப் பரப்பை.
பரப்பு நிறைந்திடும் நீர் நிலம்
வரப்பு வெட்டி பயிர் வளரும்
நிரப்பும் சேவை தளமே தனம்
எரிப்புத் தொடர்பில் கரியமில மாற்றம்.
மாற்றம் மாறும் நெருப்பு காற்று
ஆற்றல் மிகுமின் நிலக்கரிச் சுரங்கம்
கற்றல் என்பது ஆக்கச் சுழற்சி
தோற்றம் தரும் இயற்கை வளம்.
வளம் தரும் யாவிலும் நிறை
கொளல் வேண்டும்; பறிக்கும் செயல்
களஞ்சியப் பாகம் குழிப் பறிப்பு
வளமிலா செழிப்பென நாளும் அறிவோம்.