சிதம்பரம் திருச்சிராப்பள்ளி பெயராதல் – பாடும் அகத்தில் ‘பாடகம்’ என பெயர் பெற்றது.

யமக’ என்ற அந்தாதி பதிவின் நம் தமிழ் மொழி மூலத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.
1.ய: ய என்ற ஒலிப்பு யா(ய+ஆ)ழ்(ழ+ °)= ‘யாழ்’ என ‘ழகர’ ‘ஒசை’ என ‘ஓ’ங்கிய ‘சை’கையாகி ஒலிப்பினில் ‘யாப்பு’ யா(ய+ஆ) என ஓங்கார இலக்கில், அக்கண‌ நேர இலக்கண புரிதலில் யா(ய+ஆ+ப் +பு) ‘யாப்பு’ என சிறப்பாக இலக்கண ‘மரபு’ வழி
முறைமை பெற்றது.
2. ‘ம’ எனும் ‘மரபு’ என்பது ‘ம’க்களின் ‘ர’சனையை ‘பு’ரிதலின் ஒலிப்பு முறை ஆகும்.
3. க என்ற ஒலிப்பு ‘க’கர‌த்தின் மெய்யொலியில் அணி சேரும்
இலக்கின் கணம் என்போம்.
யாழ் எனும் பாடும் பாவின் பகுதியொடு
பெயரும் செயலும் கருப்பொருள்கள் ஆகும்.
‘யமக’ என்ற இலக்கண அணி ‘மடக்கு’
சொல்லணியைக் குறிக்கிறது.

சிதம்பரம் திருச்சிராப்பள்ளி பெயராதல் :

‘சி’, ‘த’, ‘அம்’ – ‘சிதம்’ ஆகி
‘சி’ ‘ர’ அம் – ‘சிரம்’ ஆகி
‘சி’ ‘வ’ ‘அம்’ – ‘சிவம்’ ஆகி
‘ச’ த அம் – சதம் ஆனவர்.

பரம் ஆகிய பொருள் தரும்
கரம் காட்டி காட்சி கொடுக்கும்
தரம் ஆகி தரணி எங்கும்
சிரம் தாழ்த்தி வணங்கும் முறை.

முறை திருமுறை அந்தாதி எதுகை
பறை சாற்றிய வழிபாடு செய்வது
உறை உள்ள உறையூர் மலை
இறை பொருளாய் மறைமுறையாய் திருச்சிராமலை.

திருச்சிராமலை திரு சிராமலை மெய்பொருள்
திருச்சிற்றம்பல யமக அந்தாதி எதுகை
திருச்சிற்றம்பல வெண்பா அந்தாதி என்னும்
திருச்சிராமலை திருமாதிருக்கும் திருவிசைப்பா திருசிரபுரம்.

திருசிரபுரம் அந்தாதி பாடலின் பொருள்
திருத்தலம் தாங்கிய மொழி பேசும்
திருச்சிராமலை யமகவந்தாதி தாயுமானவர் பாடும்
திருவந்தாதி ‘பாடகம்’ எனும் ‘திருச்சிராப்பள்ளி.’

பாடும் அகத்தில் ‘பாடகம்’ என பெயர் பெற்றது.

பாடகம் பாடும் பொருளாய் விளங்கும்:

ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.
இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர்.
மடக்கணி மடிக்கணியாய் மடிக்கணினி மடக்கணியிலே
மடக்கணி மடிக்கணினியாய் மடிக்கணினி மடக்கணியிலே.
மடக்கணி மடிக்கணினியாய் மடிக்கணினி மடக்கணியிலே.
மடக்கணி மடிக்கணியாய் மடக்கணினி மடக்கணியிலே.

1. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
‘பா’என்னும் பா’ட’ல் அ’க’த்தில் ஆகு’ம்’ பொருள் ஆக விளங்க

2. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
பாட அகத்தோன் பெருக்கம் பொருள்கோள் முதலிடை கடையிலும் வளரும்.
3. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும் –
பாட்டியல் பாங்குற பாவிற்க்கும் பொருண்மையின் செயலாய் தொடரும்.
4. பாடகம் பாடும் பொருளாய் விளங்கும்-
பாராட்டிய வண்ணம் அகப்பொருள் பொலிவுடன் காணப்படும்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்