சி-சிந்தனையில்
வ-வளர்வது
சி-சிறப்பாக
வ-வளரட்டும்
———————————–
செல்லும் செல் சென்றிடும் வாழ்வு
நல்கூற்று நயம்பட உரைக்கும் கிளவி
இல்லை தரமெனில் தங்கமும் பங்கமே!
பலர் சிலர் சிவ சிவயென்பார்.
நன்றி மறந்து விடாதே தாய்தனை
இன்று தந்திடும் போகம் தந்தைவழி.
இன்சொல் காணொளி பகிர்தலை காண்
என்றும் உண்மை ஒளிரும் நிலையே.
உணவு உடை இருக்க வீடு
பணம் பகட்டெலாம் பறவையின் கூடே.
கண்டு கொண்டு உண்டு மகிழ்வோம்
பண்டும் சிறப்பும் சேவையே நிம்மதி.
உயிர் மூச்சு நிறை வளி
பயிர் கொண்டு தாவிடும்
தசைவழி.
வயிற்றில் உள்ளதை பிண்டம் காக்கும்.
ஆயினும் ஆயிட கோடி மதிகொள்.
மனித உயிரணு புவியில் அங்கம்
புனிதம் பக்தி முக்தி காலம்
இனிய அவற்றை காப்பதே நிறைவு
பனித்துளி போலத் தான் மெய்யியல்.
நால் வழி நாற்கடல் கண்டம்
வால் வெளி இணைப்பே நாடு
தோல்தேற்றமும் மாற்றமும் காணும் வகையே
ஆல் வேல் உறுதியும் பணியும்.