சுழல்வதில் பெறுவது :
வரு மானம் உள்ள தெல்லாம்
பெரும் பொருளில் ஆன செயலே
ஊரும் பேரும் புகழும் வண்ணம்
இருப்பும் பொறுப்பும் துறப்பே பிடிப்பு.
கண்டுபிடிப்பு கொண்ட அவை பூ
வண்டு மொய்த்த வணிக சேவை
உண்டு உணவை சமைத்த மனிதம்
தண்டுவடம் கொண்டு நிமிர்ந்த இனம்.
இனம் மானம் காக்கும் உயர்
தனம் தானம் செய்யும் இயற்கை
வனம் கொஞ்சி விளையாட்டு தோற்றம்
சனம் கூடி களித்த கடை.
கடை கடல் நீரும் உலாவும்
உடை உடல் கொண்ட உயிர்
நடை போட்டு அறம் நகரும்
தடை வகை வருமான வரி.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/4-e1uh061

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA