சுற்றும் சுடரே!
முன் யென பருப்பொருளின் கருமை
பின் தொட ரொளியாய் பேரண்டமாய்
உன்னுள் சுற்றி வர மண்டலமாய்
தன்னுள் சுற்றுகின்ற புவி யியலே.
இயலில் இருக்கை இறைமை கொண்டாய்
பெயருற்று இனிமை காணென வருடும்
வையகச் சுழல் யாவும் ஒருமை
இயற்கை தரும் இனிய ஆற்றலே.
ஆற்றல் மிக கொளென தந்த
மாற்றம் நிற்க நடக்கென தகுதி
அற்றம் பார்த்து அருளும் அறச்சுடரே
மற்றும் சிலப் பல தொகுதியிலே.
தொகுப்புத் தொடரா லெனை கணித்து
வகுத்து விட்டெனை வளர்க்கும் வழிச்சுடரே
பகுதி பக்கக் குறியீட்டிலெனைத் திருத்தி
ஆகும் இந்த பிறவி நிலையிலே.
நிலைப் பெரும் பங்கு உண்டு
தலை முதல் பாதம் வரை
வலைப் பின்னல் நரம்புடன் எனை
மலைக்காது சேவை செய்யென காக்கின்றாய்.