சுழளாதாரம் – புவியடித் தட்டு நகர்வு படம்

புவியடித் தட்டு நகர்வு இமயமலை

வங்கம் விரிகடல் கொண்ட புவிக்கோலம்
அங்கம் குடநாடு வளைவிரி குடா
தங்கும் இடம் பெற்ற நிலம்
இங்கு நகரும் வரைப் படம்.

படம் மூலம் சுட்டும் நம்விழி
தடம் புரண்ட களமும் இறங்கும்
உடம் படுமொழி பொருள் விளங்கும்
ஊடகம் கொள்வீர் நீர்நிலம் அறிவீர்.

அறிந்து கொள்வது நம் அகப் பொருள்
வறிய நாடுகள் மத்தியப் புவிக்கோடு
ஏறி இறங்கும் வரைவு மிதப்பது
உறிஞ்சி எடுக்கும் நல்நிர் உடைமை.

உடைமை குடிமை வாழ்வு தரும்
கடை நிலை பெற்றே வளரும்
நடைமுறை அறநெறி அறிவும் நொடியும்
தடை மீறி கற்றோ ரறிவரே.

நலிந்த பிரிவினர் பொறுப்பினை ஏற்பர்
வலிமை பெறும் மனித உயிரியம்
கலிப்பா கொண்டும் நிலை யறிவோரே
தலித் தினமும் தழுவிக் கொள்வீர்.

கொள்ளும் நீர் வைகல்லும் நகரும்
தள்ளும் தரணிக்கு புவியடிப் பேரலை
அள்ளும் அடித்தளம் அரிப்பும் அடக்கம்
எள்ளும் விதையும் மேலும் உயரும்.

உயரும் கடல் அலை மேடான மலையளவு
இயங்கும் தீக்கனல் பொருந்தும் புவியடி
இயங்கும் மேல் வளர் மரம்
இயக்கி நம்மை ஆளும் உயிரகவளி.

உயிரகவளி மேலது நகரும் தன்மை
பயிர் வளரும் புவிமேல் தட்டு
உயிர்க் கருப்பொருள் பற்றும் புரதம்
ஆயிரமாயிர லட்சம் ஆண்டில் நகருமடித்தட்டு.

நகரும் இந்திய ஐந்தடி சதமீற்றர்
தகடு கொண்ட வடகிழக்கு பருவத் திசை
அகண்டு சென்ற திறனில் இமயம்
உகந்தே தள்ளும் புவியடி சேர்க்கை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA