தடம் காட்டும் புவியடி சறுக்கு.
தடம் காட்டும் புவியடி சறுக்கு.
படிக்கும் போது படிவம் அறிவோம்
துடிக்கும் நெஞ்சம் சுற்றும் சுற்றுலா
தடிக்கும் உருவம் மாறும் மெய்யியல்
இடிக்கும் நேரம் மின்னல் ஒளி.
ஒளிரும் மூலம்
ஒளிக்கீற்று படமே
பளிச்சிடும் பகல் தொடர் பரவல்
வெளி இணைப்புகளில் விண்வெளித் தொடர்
எளிதில் விளங்கும் படிவமே படிமலர்ச்சி.
படிமலர்ச்சி வரலாற்று வரையறை போக்கு
இடிதாங்கி கண்டுபிடிப்பு தள்ளிப்போடும் மின்னொளி
அடிஅடியாய் நகரும் புவியியல் அடி
வடிவமைப்பு கண்ட கண்டம் துண்டம்.
துண்டம் நிகழ்வில் கலக்கும் பருப்பொருள்
பண்டம் பண்டகப் பொருளாய் வளர்ச்சி
அண்டம் பற்றும் பரவல் பாலகவீதி
பிண்டம் பிணைப்பு உயிரணுத் தாயனை.
தாயனை தாய்மை ஆற்றலில் ஆறனை
இயற்கை அலை அலையாய் படிமலரும்
வயலில் வாழும் முறை அறிமுகம்
வயிறு உணரும் மனிதயினத் தேடல்.
தேடல் முடிவுகள் குறியீடு சான்று
ஆடல் பாடல்களில் வளமே கலைகள்
இடம் சார்ந்த உட்கரு உயிரினம்
பாடம் படித்தோம் புவியடி சறுக்கு .
சறுக்கு நிலை நிறைவிட மாற்றம்
ஆறு ஏரிகள் கடலடி எரிமலை
மாறுதல் என்பதை தடங்காட்டுவதே நிலம்
உறுப்பு நாடுகளின் உரிமை உண்டு.
உண்டு உயிர்த்து வசிக்கும் மாநிலம்
துண்டாக மாற்றும் நில அதிர்வு
ஆண்டு தோறும் நடைமுறை வாழ்வியல்
கண்ட மாறுதலே படிப்பினைத் தொடர்.