தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த செயல்திறனே
மனிதம் போற்றும்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த பயனுருவே
நிறைந்த கலம்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த முயற்சி
விரைவில் வினையாகும்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தொடர்ந்த வீழ்ச்சி
உழைப்பின் தகுதி.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தோழமை உறவுகளில்
துவளுவதே மனம்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
வெற்றியின் இலக்கில்
தோல்வியும் விரும்பிக்கொள்.
தோல்விக்கு எல்லையில்லை
குறிக்கோளே நிறைவு
தோல்வியின் இலக்கே
வெற்றியின் நடைபயணம்.