நாடிச் செல்வதை நாடும் தேடும்
ஓடி விளையாடுவது நரம்புத் துள்ளல்
ஆடி மாதம் அம்மியும் நகருமென்பர்
இடியும் மின்னல் விண்ணுலக ஆற்றல்.
எல்லோரும் ஓர் அறிமுக உயிர்
பல்லாயிரக் கணக்கான உயிரணுத் தொடர்
நல்லோர் மனிதம் கற்று கொள்வோரினிலை.
வல்லுநர் மெய்யியலில் சத்தில் தைக்கும்.
சத்தில் தைப்பது வளத்தினில் சுழலும்
ஆதரவுக் கோட்பாடுகள் ஆற்றுவதற்கு கூடும்
இதயம் இதமாக இயங்கும் இயக்கம்
உதவும் கரங்கள் தகவலும் தரவும்.
தகவல் தரவுத்தளம் மேலாண்மை அமைப்பு
நகமும் விரலும் இணைந்தே செயல்படும்
உகந்த நேரம்தான் ஆளுமை ஆளும்
தகுதி தரம் குணத்தால் திறனாகும்.