நூலக வழி வானளவு உறை
நேசிப்பது நேர்த்தித் தர நேரமாக்கும்.
நூலக வழி வானளவு உறை
கல்வி பல தந்து நிலவ
பல்லுயிர் வளம் பெருகும் நிலைக்கும்
கடல் நிலம் விண்வெளி அறியும்.
கற்று அறிந்த ஒரு சில
வற்றாத மலர்க் கணைத் தொடுப்பு
உற்றுப் பார்த்து உலக வழியில்
ஆற்றுப் படுத்தி நிம்மதி ஆக்கும்.
பெரும் மாற்றம் செயல் படும்
தரும் வகை யாவும் வசப்படும்
ஊரும் பேரும் புகழும் செழிக்கும்
உருப்பெற்ற நிலையில் தானே இயங்கும்.
வாசிப்பு வட்டம் புதிய வழியாகும்
நாசி நரம்புகள் நலம் பெறும்
வசிக்கும் நிலத்தை அழகு படுத்தும்
நேசிப்பது நேர்த்தித் தர நேரமாக்கும்.