“பயணம் இல்லா பயணம்”
பெங்களூர் பன்னாட்டு மையம் –
அமைதியான வாசிப்பு நிகழ்வில் :
பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும்.
‘தரவு சார்ந்தது ‘ CODE DEPENDANT எனும் நூலாசிரியர் ‘மதுமிதா முருகையா’ – தமிழ் மொழி குடும்பம் – பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்,
‘பெண்கள் 2024’ பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன்.
இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்றம் காதொலி, காணொளி மூலம் பதியலாம் என்று உள்ளேன்.
ஏப்ரல் 4 2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரையறைக்குள், கிட்டத்தட்ட, எமது உடலுறுப்பும் நாற்பது மணித்தியாலங்கள் (நொடி) ஒத்துழைத்தது.
அந்த நேரத்தில் எமது
விரைவான வாசிப்பினில் ‘டெர்வலா மர்பி’ பயண இலக்கிலா நூல் “அயர்லாந்தில் இருந்து இந்தியா மிதிவண்டி” என்ற முழு சாய்வு (FULL TILT) என்ற நூலினை எமது மறுபார்வையாக இன்று பதிய உள்ளேன்.
Legend -பயணவிரிவாளர்
வாழ்வின் கடினமான பயணம், பயணத்தில் ஏற்படும் நெருக்கடி, மரணத்தை நெருங்கும் பயிற்சி அவரது முன்னேற்றத்தை, தன்னிறைவு பெறபவராக மாற்றியமைக்கிறது.
அவரது நாட்குறிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நினைவுகள் உண்மை நிலையினை தெரிவிக்கிறது.
1963 மர்பி தமது மிதிவண்டியான ‘ரோசு’வில் பயணத்தை தொடங்குகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் புகுந்து இரான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா அடையும் வரை பதிவினில் நிறைவு செய்கிறார்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டிபன்சன் வரிகளில் முதலில் பதிகிறார்.
‘ என்னை பொறுத்தவரை எங்கும் செல்லாமல் பயணம் செய்கிறேன். பயணித்திற்காகவே பயணம் செய்கிறேன்.
நம் வாழ்வின் பெரிய செயல் என நகர்வது
தேவைகளையும், இடையூறுகளையும், நாகரிகத்தின் இறகு படுக்கையிலிருந்து, கீழ் இறங்கி வந்து, காலடியில் சிதறிக் கிடைக்கும் கரும்பாறை கற்களை(Granite) கண்டறிவது.
பயண வழி நிகழ்கால தொடர்
பயணமொழி கூடும் ஞானம்.
பயணம் வாழ்வின் நிலைக் கோட்பாடு
பயணம் இல்லாது இருத்தல் நிறைவிலாது
பயணமே நிறைவு வாழ்விடத்தின் கோடு
பயண நகர்வு நகரும் பண்பாடு.
பண்பாட்டு நிகழ்வு தேர்வு திறன்
மண் வளம் கண்டறிவது மிகும்
உண்டு உயிர் வாழும் முறை
உண்மை வழிபாட்டின் உலக பயணம்.
பயண வழி நிகழ்கால தொடர்
உயர்வு தாழ்வு நிலைகளை அறிவோம்
நயம்பட உரைக்கும் பன்மொழி ஆதரவில்
இயல்புநிலை மனித உரிமை அறியும்.
அறிவது நல்லது எனும் குறியீடு
அறிவியல் பாதை உயிரின முறை
அறிவு சொல்லும் அளவு விளங்கும்
அறிவியல் மொழி குடும்ப நிலையறிவோம்.