பொங்கல் வாழ்த்து 2023

இருக்கும் பொருளென நம்பிக்கை கொள்வீர்!
தருவிக்கும் பொருள் நிலை கொள்ளும்
பருப்பொருள் சாரும் பாரினில் எங்கும்
தரும் பொருள் தரம் காண்பீர்.

இறை தேடும் உள்ளம் உயிரனை
மறை காக்கும் பொருட்டு தொடர்
உறை போட்டுக் கொண்டு வரும்
பறை சாற்றி வழிபாடும் தொடரனை.

ஊர் சாலை மகிழும் வண்ணம்
யார் யார் எல்லாம் வள்ளலென
மார் தட்டி கொள்ளும் மாந்தரே
பார்வை கணிப்பு புவியின் தோற்றம்.

இரை தேடும் உண்ணும் உணவு
கூரையில் தொடங்கிய வாழ்வு வலையவயல்
வரையறை வரம்பில் வரப்பில் கொள்ளளவு
ஏரைப் பூட்டி உழுத உள்ளம்.

உறவைத் தேடி உண்ணும் உணவு
நிறம் மாறி நிலை வளரும்
அறம் வளர்க்கும் வகையே நாளும்
புறம் பேசுதல் என்றும் வேண்டா.

பறவைக்கு உண்ண உணவு உண்டு
நிறமாறும்; குணத்தின் இலக்கே இனம்
திறனளவே மதி; மனம் திறந்திடுவீர்!
உறங்கி உண்டு நடுநிலைப்பாட்டை நாடு.


” செயல் மன்றம் ” பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

https://anchor.fm/thangavelu-chinnasamy/episodes/2023-e1tgdfs

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA