பரதம் பாடும் ரதம் பாரதம்
நரம்பு உளத் தோற்ற மெய்
ஆரம் சுழலும் நிலக் கோடு
வரம்பு உள்ள கிடைக்கோடு நெடுங்கோடு.
கோடு போடும் வகை மனசு
நாடு நாளும் நாடும் ஊரும்
தேடு பொறி மூலம் உலவு
பாடு பழகு நேசி பேசு.
உண் உண்மை வரும் தரும்
ஆண் உரை ஆரம்பிக்கிற உணர்வு
பெண் நிறைவு அறிந்து
கொள்ளும்
காண் ஒளி தமிழ் மொழி.
புதிய விசை புவியின் ஈர்ப்பு
மதிய வெளிச்சம் ஆக்கம் ஆற்றல்
ஊதிய உயர்வு தாழ்வு அகலும்
ஆதி அந்தம் தொடர்பே நிகழ்வு.
வாழ நினைத்தால் வாழலாம் வாசி
அழகு நிலா அளவுப் பனி
பழம் கனிந்த சுவை தசை
மழலைப் பேச்சு உயர் தாயனை.
மேகம் கறுத்து வீழும் மழை
தாகம் தீர்க்கும் மரு உந்து
போகம் விளையும் தரும் வரம்
யோகம் யாவும் நிகரின வளர்ச்சி.