யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர்.
எழுத்துரு, சொல், பொருள் யாப்பு
எழுதி பொருள்படும் அணி வகை
எழுத்து சொல்லில் நிலைப்பு ஒலியால்
எழுத்துரு’யமக’ ‘ய’தார்த்த ‘ம’ரபியலில் ‘க’ற்பதே.
கற்பதும் பின் தொடர்வதும் மடக்கொலிப்பே
நிற்பதும் நடப்பதும் படிப்பதும் மனதளவில்
ஏற்பதும் கூட்டொலியில் பெயரிடத்தும் வேறொருவர்
கற்பதன் தொடரொலிப்பே காலத்தின் தொடர்.
தொடர் காணும் தலைமுறை தலைப்பினில்
படரும் பற்றும் இணைப்பு நிலை
ஆடல் கலை இலக்கு இலக்கியம்
பாடல் மொழியுள் உள்ளத்தின் செய்யுளே.
செய்யுள் வடிவில் இருக்கும் ‘யமக’
வாய்ப்பொலி யாப்பொலி பொருள் தரும்
உய்ய உயர உயிரொலி அடிகளில்
செய்யுளின் ஓசை திருமுறை அந்தாதி .