வெந்நீர் ஊற்றுநீர் குளியல் இயற்கை
அந்நீரும் ஊக்க மருந்து.
சுடுநீர் கொண்டு குளிக்கும் மாநிலம்
ஊடுநீராய் வந்து சேருவதொரு புவியியல்
மடுவில் உருண்டு படியில் நின்று
நடுநீர் ஊறும் ஊற்றுக் கலவை.
கலக்கும் நீரும் வெந்நீரூற்றில் மாறும்
நலமாய் நீராடி கனலேறு மெழுநீரும்
கலப்பு நீர் ஆழமும் உடையவை
கலக்கும் தண்ணீர் வெப்பநீர் குளங்கள்.
குளங்கள் புவிவெப்ப ஆற்றல் கடல்சார்
வளமை பெற்று தரும் நிலமுண்டு
மளமளவென ஏறும் நிலப்பரப்பும் காண்க
பளபளவென காணும் இயற்கை எழில்.
எழில் கொஞ்சும் நல்கை விரிநீர்
வழி அறிந்து பயணம் செய்க
ஆழி சூழ் உலகும் உயிரும்
வழிபாடும் மருத்துவ இடமும் உண்டு.