நாம் வாழும் வாழ்க்கை உலக செயல்களில் உள்ள பகிர்வுகளில்
ஒரு சில நல்ல செயல் முறைகளால் நிலைத்து இருக்கிறது. அவற்றில் என்றும் ஒன்றி இருப்பது நற்சிந்தனை, நற்செயல்கள், அறத்தால் இயன்ற அளவு இடைவிடாது செய்யும் செயல், ஏற்கும் இடமாக உலக அளவில் ஒவ்வொரு நாளும் வாழும் வாழ்க்கை மதிப்புறுவாகிறது. (தி.33)
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தமது தொடர் செயலாக தந்தை மகனுக்கு அறிவளிக்கச்செய்வதே ஆகும். வாழும் வாழ்க்கையில் தனக்கு கொடியது எனப்பட்டதை பிறருக்கு எவ்வகையிலும் செய்ய விரும்பாமல் இருத்தலே நல்லது. வாழ்க்கையில் நிலையாத செல்வம் நிலைக்க பெற்றால் , நிலைத்தவற்றை தமது வாழ்நாள் முழுவதும் அறச்செயலில் ஈடுபடுதல் அனைவருக்குமான படிமலர்ச்சியாக, வரலாற்றில் தொடரும். தெரிந்த செயல்வகை தெரியாததையும் அறிந்திட செய்து செயற்கை நுண்ணறிவும் உலக வாழ்க்கையில் செயல்படத் தொடங்கும்
உலகு தம்மோடு கொள்ளும்:
‘தம்மோடு கொள்ளாதவற்றை கொள்ளாது உலகு’ (தி.470)
உலகம் கொள்முதல் மூலம் கொள்ளுகின்றவை எல்லாம் இயற்கையின் பங்களிப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எந்நாளும் நீரால் இருமடங்கு நிறைந்தவையாகவும், ஒரு மடங்கு நிலத்தின் அரணாக, மேடான பகுதிகளில் மலை பாதுகாப்பாகவும் , மதிற்போல அணியாக காடுகளையும் காக்க வேண்டிய மண்ணும் இருக்கவேண்டியதே உலகமே சுற்றுகின்ற சுற்றுசூழலாகும்.(தி.742)
“செயல் திறன் வித்தே சொத்தாகும்”. ஒவ்வொருவரும் தனது செய்யக்கூடிய செயலை முடிக்கும் ஆற்றலும், அதனை விலகச் செய்ய செய்யும் மாற்றோரின் வன்மையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படும் ஆக்கத்தினை மேலும் அறிந்து செயல்படுதல் எக்காலத்திலும் பயன்பெறும்.
அரியவற்றை கிடைக்க செய்வதிலும் செய்வதற்கு
உரியவற்றையும் செய்திடல் வேண்டும்.
(தி.489)
செய்பவர் தன்மையும் செய்யும் செயலின் ஏற்கும் காலத்தையும் உணர்ந்து செய்வது நாம் வாழும் வாழ்க்கைக்கு பொதுவாகவும் பொருத்தமாகத் துணை புரியவேண்டும். வாழும் வாழ்க்கை உலக நன்மைக்கு பயன்பெறும் எனில் போற்றி செயல்பட வேண்டும்.
உலக இயற்கை முறை சார்ந்த குறியீடுகளை அறிந்து தெரிந்து செல்லும் ‘அ’மைப்பு ‘ர’கவாரியாக ‘சு’கமளிக்கும் ‘அரசு’ ஆக நிலைக்கும்.
சொல்லுகின்ற சொல் நம்செல்களின் வளர்ச்சியினை பொறுத்து, உள்ளத்தின் அடிப்படையில், தாயனை, ஆறனை தொடர்புகளில் கோர்த்து, தைத்து அமைத்த சொற்கள் வாயிதழிலில் எளிதாக வெளிவரும். சொன்னபடி செய்யும் அளவறிந்து வாழும் வாழ்க்கையே எந்நாளும் சிறப்புறும்.