காவிரி காத்து விரியும் –
வாய்க்கால் கால்வாயாகும் .
கால்வாய் விரியும் வாய்க்கால் வழி
வால் பகுதி வரை நீடிக்கும்
பால் திறன் வளம் பெறும்
போல் தனித்து நிற்கும் ஆறுதல்.
ஆறு போகும் வழியே வாழும்
இறுமாப்பு கொள்ளாதே நீர் நிலையே
ஊறும் நீர்மம் வளிமம் உயிரியம்
தாறுமாறான நீர்க்கோலமே வயலும் வாழ்வும்.
வாழ்த்து அட்டை வரலாற்றில் அரசியல்
பாழ் நிலப் பகுதிகளை உள்ளடக்கிய நிலை
ஆழ் துளை கிணறுகள் வெடிப்பு
சூழ் அழுத்தம் பொங்கும் நிலவரம்.
நிலம் நீர்ச்சுற்று அரியதொரு வயல்வெளி
தலக் காற்றில் விளை பொருளாக்கம்
வலம் வரும் நீர் தேக்கம்
நலம் தரும் இடமே வேளாண்மை.
வேளாண்மை வேரான மனித திறன்
தாளாது தளராத பங்களிப்பே செழிப்பு
ஆளாளுக்கு ஒரு பண்பாட்டின் பயணம்
நாளாக தொடரும் சமயச் சடங்குகள்.
சடங்குகள் எல்லை நீங்க வேண்டும்
நடக்கும் நிகழ்வுகளில் சுழலும் புவி
வடக்கு தெற்கு வழித்தட புவித்தட்டு
கடக்கும் கிழக்கு மேற்கு நாடும்.
நாட்டின் குறியீடு மக்களின் மதிப்பீடு
வீட்டில் இருக்கும் விருப்பம் உள்ளதும்
தட்பவெப்ப நிலை மாற்றம் கொண்டதே
நட்பும் உறவும் எல்லை யில்லை.
இல்லை என்பதை இருக்க பொறுப்பிடு
நல்நீர் பாயும் கால்வாய் விரியும் காவிரி
கல்லும் மண்ணும் நீரும் நெருப்பும்
வல்லமை வாழ்க்கை அறத்தின் வாய்ப்பு.