2,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவுசார் மனித மெய் உறுப்பில் கன்னம் உயரமான மண்டை உடைய குறித்த பதிவு:

2,30,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
அறிவுசார் மனித மெய் உறுப்பில் கன்னம் உயரமான மண்டை உடைய குறித்த பதிவு:

தொடக்க கால உடற்கூறியலில் தற்கால அறிவுசார் மனித இனம், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓமோ-கிபிஷ், எத்தியோப்பியாவில் கன்னம் மற்றும் உயரமான மண்டை ஓடு கிடைத்த பதிவில் இந்த காலகட்டத்தை குறிப்பிடலாம்.
இப் புதை படிவங்கள் சுமார் 233,000 ஆண்டுகள் பழமையானது என 1960 ஆம் கண்டுபிடித்தனர்.

காலக்கணிப்பு எரிமலை சாம்பலின் தடிமனான அடுக்குக்கு கீழே புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் விஞ்ஞானிகள் சாம்பல் அடுக்குகளில் வேதியியல் மூலம்
கைரேகைகளைப் பயன்படுத்தி புதைபடிவங்களைத் தேதியிட்டனர்.
சிறப்பியல்புகள்:
ஓமோவில் உள்ள புதைபடிவங்கள் தற்கால மனித குணங்களைக் கொண்டுள்ளன.
தற்கால மனித எச்சங்கள் பின்வருமாறு:
ஜெபல் இர்ஹவுட்:
மொராக்கோவின் புதைபடிவங்கள் சுமார் 315,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும்
நவீன மற்றும் தொன்மையான அம்சங்களின் கலவையை வெளிப்படுத்துகின்றன.
அறிவுசார் மனித இனம் கிட்டத்தட்ட 200,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு இடையில் முன்பு
அவர்களின் ஆரம்பகால மனித முன்னோடிகளிலிருந்து பரிணமித்தனர்.
அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்கான திறனை வளர்த்துக் கொண்டனர்.
கிபிஷ் உருவாக்கம் என்பது ஓமோ ஆற்றின் கரையில் வெளிப்படும்
நன்கு தேதியிட்ட உருவாக்கம் ஆகும்.

பழங்காலத்தில், எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கு மனித பரிணாம வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான தளமாக இருந்தது, இது ஆஸ்ட்ராலோபிதேகஸ்
போன்ற ஆரம்பகால மனித இனங்கள் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்த வரலாற்றுக்கு முந்தைய பகுதியாக இருந்தது, இது பற்கள், தாடை எலும்புகள் மற்றும்
பகுதியளவு எலும்புக்கூடுகள், நன்கு தேதியிட்ட உள்ளிட்ட செழுமையான புதைபடிவ பதிவை விட்டுச் சென்றது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு பின்; இந்த
கண்டுபிடிப்புகள் காரணமாக தற்கால மனிதர்களின் தோற்றத்தை புரிந்து கொள்வதற்கான முக்கிய இடமாக இந்த பகுதி கருதப்படுகிறது.

குறியீடு மூலப் பொருள் தரும்படி
அறிந்து புரிந்த வகை

புதை படிவ மனித இனம்
அதை கணித்து அறிந்த கற்காலம்
எதையும் சரியாக புரிந்திட இக்காலம்
அதை தெரிந்திட மனித வரலாறு.
வரலாறு தொல்லியல் தொடரின் உரியநிலை
கரம் பிடித்து நடந்த மனிதனும்
நரம்பு மண்டல படிவநிலை காட்டும்
திரவத்தின் தொல்லுயிர் மனித பேரினம்.
பேரினத் தோற்றம் உடைய பொலிவு
உரிய சான்றின மெய்யியல் கூறுகள்
ஓரினம் கண்ட உள்ள உண்மை
கரிய உருவத்தில் வெளியிட இருப்பிடம்.

இருப்பே பொதுவிட வாழும் மக்கள்
கருப்பின மக்கள் வெளிறியது அங்கனம்!
மருத நிலம் நீர் அழகில்
உருவக அணி பாலினச் சேர்க்கை.

சேர்வதன் பொருளில் இன்ப வாழ்வு
ஊர்ந்த உயிரின உள்ள அன்பில்
பார்வை கொள்ளும் வனப்பில் கன்னம்
ஊர் பேர் செல்ல குறியீடு.

குறியீடு மூலப் பொருள் தரும்படி
அறிந்து புரிந்த செயல் வகை
கறி காய் எதுவென உணவு
அறிந்தவை அகத்தில் புறப்பொருளும் சேர்க்கை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்