4,76,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு – நடைபாதை தளம் மற்றும் கட்டுமான ஆரம்ப காலத்தின் குறியீடாகும்
கட்டுமான நிலைமை
கட்டுமான வாழ்வு கூடு கட்டும்
ஊட்டச்சத்து மிகு வாழும் உறைவிடம்
மேட்டு நிலம் அழகு தளம்
கட்டும் பணி புரியும் வண்ணம்.
வண்ண வடிவம் ஒன்றில் ஒன்றி
உண்ண உணவு முறை இலக்கு
தண்ணீர் தேக்கி வாழ்ந்த போக்கு
ஆண்டு முறையில் தேறிய நிலைமை.
நிலைமை நிலம் நீர் நம்
நிலைப்புத் தன்மை மனித இனக்குறியீடு
கலைப் பொருளாக மாறும் சுற்றுச்சூழல்
நிலைப் பொருளால் வடிவமைப்பு பார்வை.
பார்வை பொருளில் கட்டிய கோலம்
ஊர் கூடி ஒன்றி வரும்
பார் பார் பாரினை காண்
யார் யாரும் யாவரிலும் ஒன்றுவதே.