8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சமூக உந்துதல் காலம்

8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சமூக உந்துதல் கால நிலையறிவோம்

சமூக உந்துதல் உவந்து பங்காற்றும்
சுமூகமாக குறியீடு கால வரையறை
சுமூகப்பணி குறுகிய எல்லை கடந்து
சுமூகமாக காலந்தோறும் மேம்பட்ட நிலையறிவோம்.
நிலை நிறைவாக செல்லும் படியாகட்டும்
அலை அலையாய் படிமலரும் ஆண்டறிந்தோர்
கலைவடிவ எழுத்துரு அளவு தன்மை
வலையமிட்டு வடிவம் ஒன்றில் இணைந்தோரானார்.

விண்மீன்கள் அந்தாதி எதுகை
பார்வை

விண்மீன்கள் கடத்தும் மின் ஒளி
கண்ட காட்சி தொகுப்பு படம்
பண்டைய காலம் தொட்டே வனப்புறும்
நன்றே தோன்றிடும்
பகலும் இரவும் .

இரவும் மாறும் வரையறை வட்டம்
பரவல் நிலை நிறை குறியீடு
வரலாறு கருதுகோள் மாற்றம் உண்டு
பரவும் தன்மை கொண்டது ஆகும்.
ஆகும் காலத்தகுதி கருதுகோள் தத்தம்
தகுதி தரக் குறியீட்டு திறவுகோலில்
பகுதி பக்க குறியீடு திறனொளியில்
தொகுதி தொடர்ந்து குறைநிறைவுறும் திசையொளி.

திசைகாட்டும் அண்ட வானியல் அலகு
அசைவில் உலாவி இணைந்து செயல்படும்
திசையெங்கும் விரிவடையும் படிமலர்ச்சி நிலை
இசைந்து பயன்படும் பருப்பொருள் கலவை.

பனியுருகி கடல்நீர் அலையில் இருபங்கு
இனியவையாய் நிலம் நம்மூர் ஒருபங்கு
கனி காய்கறி வகைகள் உண்டு
இனிதே வாழ முயற்சியில் நம் வாழ்வு.

வாழ்வும் வளமும் நலமும் பெற
வாழ்க வளர்க எனும் போக்கும்
தாழ்வு மனப்பான்மை போக்குக உயர்
வாழ்வு முறை உந்துதலே மெய்யியல்.

மெய்யியல் உயிர்ப்பே மூலக் குறியீடு
நோய்நொடி இல்லா வாழ்வின் முறை
சாய்ந்த நகர்வில் புவிச்சுற்று நாளும்
வாய்ப்பில் காக்கும் தலைமுறையும் பின்தொடரும்.

தொடர் பரவல் ஆதி அந்தம்
படரும் கொடியே சமூக பகிர்வு
கடந்து செல்லும் படியாகட்டும் புன்னகையில்
கடக்கும் நம்முனைப்பு முன்னே செல்லட்டும்.

24 June 2024
ஏற்படக்கூடிய விண்ணுலக விண்மீன் காட்சி.
(இந்த தலைப்பு காணொளியினை எமது “முகநூல்” மற்றும் “செயல் மன்றம்” இணைய தளத்தில் காணலாம்.)

பாலக வீதியில் மின்னணு அவரவர்
காலத்தில் வாழ்நாள் நிகழ்வுகளிலோர் பங்கு
ஆலங்கால அகராதி விரிவின முறை
பாலகவழி முறையிலோர் விண்ணுலக விண்மீன்.

விண்மீன் இடர் அதிர்வலை கதிரவனின்
விண்ணொளி இடைத்தடுப்பின் வெடிப்பொலி காட்சி
விண்மீன் வெள்ளைக் குள்ள உள்ளடக்க
காண்பதோர் எண்பது ஆண்டுக்கோர் மின்னொளி.

மின்னொளி காண் படல வெளிச்சம்
உன்னகத்துள் செல்லும் வழியில் உள்ளவை
வான்வெளி வானிலை ஆய்வு கருதுகோள்
தன்மை கொண்ட நிகழ்வின் படக்காட்சி.

படக்காட்சி எட்டும் நம் வரையறை
கடந்த காலங்களில்
நிகழ்வுகளின் இணைப்பு
படம் கணிக்கும் வழங்குமோர் கருத்து
கடந்து செல்லும் (T Coronae 💫 Borealis) பற்றுகை கொள்ளுகை.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்