உதிக்கும் உதயமூர்த்தி எனும் தமிழ்சுவைஞர்
நதிநீர் இணைப்பு நாட்டின் தேவையென
பதிவு செய்த பயணிகளில் ஒருவர்
எதிலெது முடியும் எனும் சொல்லாளரின்
M.S உதயமூர்த்தி 95 வது பிறந்தநாள் பதிவு
“நம்பும் ஆற்றல் வாய்ப்பு மிகும்
அம்புக் கணைத் தொடுக்கும் இலக்கு”
தம்பிகள் வாழ்த்தும் தொடர் பண்புடன்
எம் சேவையும் சேர்க்கும் வளம்.
வளம் தரும் வழிபாடு தொடர்பில்
தளம் மூலப் படர் சூழலில்
களம் காணும் உயிரியத் திறனில்
உளம் கனிந்த இனிய வாழ்த்து.
வாழ்க்கை அறத்தின் நிலைப்புத் தன்மை
ஆழ்ந்த சிந்தனை நேர்மை செயலென
வாழ்ந்து காட்டி வழித்தடம் அமைத்தார்
வாழ்த்தி வணங்கி மகிழு சொல்தந்தார்.
சொல்லொலி குறியீடு எழுத்து முறைமை
வல்லமை உந்தவோர் ஓர் எடுத்துக்காட்டு
நல்லுள்ளம் சொல் தொடுதிரை காட்சி
நல்லாற்றல் சொல்லே
” நம்மால் முடியும்”.
“முடியும் ” என்ற நம்பிக்கை உலவும்
“முடியும் ” என்றொரு மனித வளம்
“முடியும்” எனும் விளக்குத் தொடர்
“முடியும்” எனும் சொல் வேந்தரவரே.
ஏந்திச் செல்வோம் வழி வகுக்கும்
வந்த வழியறிந்த இருப்புப் படைகள்
தந்தி போல் தேவை சேவை
உந்து விசையுடன் வாழ்த்தி மகிழ்வோம்.
என்றும் அன்புடன்
பதிவர்
தங்கவேலு சி
செயல் மன்றம்
seyalmantram.in