.
எரிமலை வெடிப்புத் தோன்றும் காலம்
கரிம நிகழ்வு முறைச் சாளரம்
சரியாக கால அளவுத் தகவல்
உரிய பல பேரின விலங்கழிவு
புவி அடிச் சறுக்கு நகர்வுதனில்
ஆவியுடன் தீக்குழம்பு ஆங்கே உருக்குலைவு
தவிப்பில் தகர்ந்த
மாகாணமும் மடிந்த
குவியல் குழம்பாய்
கொந்தளிப்பு புவிக்கடியில்
எணினி கணிப்பு நாற்பத்திரண்டு கோடியாண்டில்
கணினி துணைக் கருவி அறிவில்
அணி அணியாய் திரளாய் தீத்திவலைககள்
ஏணியாய் புவியடி
எரிமலை துவங்கியதே.
நில மாற்றம் நிலை மாற்றம்
இலக்கு மாற்றம் புவி மாற்றம்
துலக்கும் மாற்றம் விளங்கும் மாற்றம்
கடலடி மாற்றம் கண்டமும் மாற்றமே.