வாழ்வதே அன்பிலும் பண்பிலுமே ! ஏசுவதேனோ!! காலை உணவு தரம் பார்த்து மாலை வரை மதி கொண்டு வேலை வாய்ப்பு பெறும் தகுதி அலை யலையாய் பெண்டீர்க்கு ஏனோ! ஏனைய அறிவுரை வழங்கும் முறை தானை தரணி போற்றும் வண்ணம் மானே தேனே கெஞ்சி கொஞ்சி தானே எல்லா மென ஏசுவதேனோ! ஏச்சும் பேச்சும் இரு பாலாரக்கே இச்சை அடங்கும் வரை ஆசை கச்சை கட்டிய கடிவாய் அடக்கு பச்சை இலைப் பண்பேத் துளிர்க்கும். அகவல் சூழ் மெய் யழகு தகவல் அறியும் உணர்வு காணும் மகளிர் மட்டுமே பெறும் பேறு பகலிரவு எப்பொழுதும் சூழும் வேலை.