அந்தாதி எதுகை பாவினத் தொடர்
புகழும் பாராட்டும் குணமும் திரளும்
புகழ் ஆளர்க்குத் தானோ!
பாராட்டுதல் யாவும் செல்வாக்கு உடையோர்க்கு
சீராட்டி மொழியில் நாவில் தொடர்வோர்க்கு
ஆராய்ச்சி ஆய்வு அறிந்து பதிவோர்க்கு
ஓராயிரம் முறை ஒப்பீட்டு பார்வை.
பார்வை கொள்வோர்க்கு வகுக்கும் பாதை
போர்வை போர்த்தும் இடைவெளி காலம்
ஏர்பூட்டி சென்ற
சோழ தலைமுறை
மார்தட்டி பகிரும் அந்தாதி எதுகை.
எதுகை பாவினத் தொடர் ஓரெழுத்து
இதுவும் பாவின மொழிதான் பாவலர்காள்
அதுவும் அன்பின் துணைநிலை அகராதி
ததும்பி வழிபடும் நேர்மை தொகுப்பு.
தொகுப்பு பதிவு பேரண்ட அதிர்வுத்தொடர்
தொகுதி தொண்டில் குறியீட்டு திசை
விகுதி விண்வெளி குறியீட்டுடன் மண்வள
பகுதி பலரும் குறித்த திறனாய்வே.