ஆற்றலின் இயக்கவியல் ஆற்றலிலே தொடங்கி ஆற்றலில் முடியும் தன்மை.

ஆற்றலின் இயக்கவியல் ஆற்றலிலே தொடங்கி
ஆற்றலில் முடியும் தன்மை.

பேரண்டத்தில் சிறந்தே உள்ளோம்! தேடுவோம்!!
பேரணியில் விரிவாக இருக்கிறோம்!!

மனிதத்துள் ஒற்றுமை ஒருங்கே சேர
மனிதவளத்துள் உயிராய் உள்ளதே!

மனத்தில் தேடிப் பிடித்தோம் பலகாலம்
மனதிலே உள்ள கோவிலில் உயிராய்
மனதார வான் வீதியில் சுற்றினோம்
மனத்திலே உள்ளதன் எல்லை விண்வெளியே.


விண்வெளிக் கோள்களில் விரிந்த வானயெல்லை
மண்ணில் வாழும் நல்வழியில் பலகாலம்
விண்ணைத் தாண்டி வருவாய் எனும்
மண்ணைத் தாண்டி உளம் சார்ந்தது.

சார்ந்த குறியீடு மூலப்பொருள் பண்பாட்டெல்லை
சேர்த்து பெருகிய கணிப்பில் விரும்பி
கோர்த்து அறியும் வானியல் ஆய்வககூறு
சேர்ப்பதில் நுண்ணறிவும் தேடிய சமன்பாடு.

சமன்பாடு கிரகவாசல் தேடல் முடிவு
தமனி சிரை இரத்த நாளம்
நமது மூளை செயல் திறனாய்வு
சமன்பாட்டில்(வெப்ப இயக்கவியல்) விண்மீன்கள் கிரக புறக்கோள்கள்.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்