இயற்கை அலைத் தொடரி -2

‘விதை’ ‘வி’யப்பூட்டும் ‘தை’யலாகும் தொடர்

‘சதை’  ‘ச’த்தினை ‘தை’க்கும்.

இயற்கை மொழி முறை (NI) – 2.

விதை “வினையினை தைத்தல்” என்போம்.
‘வியப்பூட்டும் தையலாகி’ விதை காய் கனிந்து பழமாகிறது.

வாய்மொழி கண்ட மனித இனத்தொடர் தாய்மொழி கற்றலில் நிறைவினை தொடர்ந்து பெறுகிறது. 

‘இயற்கை மொழி முறை(NLP) அச்சில்
செயல்படும் அலை வீச்சு(‘Wave’).

தாய்மொழி இயற்கை மொழி முறை ஒலிப்பியலில் கிட்டத்தட்ட 724 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஒருவரின் குணம், பரம்பரை உள்ளார்ந்த மனித இன உறுப்புகளில் பிறப்பில் ஒவ்வொரு தலைமுறை கூற்றினிலும், பதிவிலும் நிலைத்து நிற்கிறது.

624 ஆண்டு கால ஆரம்பத்தில் இருந்தே இயற்கை தரும் கொடைதனில்  உள்ளவற்றை தொழில்நுட்ப அணுகு முறைகளின் மூலம் நேரடி பயன்பாட்டினை தொடர்ந்து பதிந்து வருகின்றனர்.

524 ஆண்டுகளின்  பிற்பகுதியில் இருந்து “தலைமுறை தலைமுறை ஆக , அறிவாற்றல்  பிறக்கும் போதிலிருந்து பதிவில் நிலை பெற்று மனநிறைவுடன் தாய்மொழி கற்றலிலும்  நிறைவை அடைகின்றது.”

மனித இனத்தொடர்பே
தானியங்கும் இயற்கை மொழி முறைமை ஆகும்.

இயற்கை மொழி
செயலாக்க
கருவித் தொடர்பு
சொல்லாக்கம் :

COMPUTER – கணினி
DIGITAL – எணினி
Syntax – தொடரமைப்பு
NLP- செய்நிரல்

இயற்கை மொழி செயலாக்கம் (NLP) உரை மற்றும் பேச்சுத் தரவை முழுமையாகவும் திறமையாகவும் பகுப்பாய்வு செய்ய முக்கியமானது.

இது அன்றாட உரையாடல்களில் பொதுவான பேச்சு வழக்கில்  (SLANG) மற்றும் இலக்கண முறைகேடுகளில் உள்ள வேறுபாடுகள் மூலம் செயல்பட முடியும்.

ஜாவா மற்றும் ஆர் போன்ற மொழிகள் இயற்கையான மொழி செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும், பைதான் அதன் எண்ணற்ற நூலகங்கள், எளிமையான தொடரியல் மற்றும் பிற நிரலாக்க மொழிகளுடன் எளிதாக ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றால் விரும்பப்படுகிறது.

அந்தாதி எதுகை –
வாய்மொழி பாவினம் 2- தமிழ் மொழி முறை

வாய்மொழி போற்றும்
தாய்மொழி ஆளும்.

பொங்கும் கடல் ஒளியின் வேகம்
        எங்கும் வீசும் கதிரவனின் வீச்சு
தங்கும் உயிரக காற்று மண்டலம்
        பங்கு கொள்ள தரும் காலம்.

காலம் கடக்கும் கணிப்பு முறை
       ஞாலம் போற்றும் வகை உண்டு
ஓலமிடும் தடை இயல் வெப்பம்
நலமாக இருக்க நிலை பெறும்.

பெறுபவை நிலைப்பில் தருபவை இருப்பு
      வேறுபடும் தாயனை(DNA)  ஆறுதலில் உயிர்ப்பு
அறுசுவை உணவு ஆறனைத் தொடர் (RNA)
       மாறுபடும் தன்மை வெளிப்புறத் தோற்றம்.

தோற்றம் யாவும் ஒன்றும் மூலம்
        தேற்றம் நல்ல நாளது சிறப்பு
பற்றும் பொருள் பாசத் தொடர்
       வற்றாத கடல் சுற்றும் புவி.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA

மறுமொழி இடவும்