கடிதம் கடக்கிறது
கடிந்து சொல்லும் அளவும் அதிகம்
துடித்து பேசும் மக்கள் பதிவு
இடித்து காட்டும் பண்பின் படை
தடித்த எழுத்து தொடங்கி மறைகிறது.
மறைவில் இருந்து பழகிய பழக்கம்
உறையில் இருந்து உருப்பெற்ற மலர்ச்சி
கறைபட்டு எழுதும் கோல் தாள்
குறைபாட்டை நீக்க வேண்டிய கருத்து.
கருத்து கணிப்பு நேரே பிடிப்பு
இருப்பு நிலை ஆக்க பதிவும்
துரும்பும் துருப்பும் திரும்பும் பக்கம்
கரும்பும் நெல்லும் பொங்கும் பொங்கல்.
பொங்கல் வாழ்த்து அட்டை படம்
தங்கள் புரிதலும் நேரடிப் பேச்சு
அங்கும் தளத்தில் சேர்க்கும் திறன்
இங்கும் பயனர் யாவும் நேரலை.