சிறுபொழுது பெரும்பொழுது
கையறி மெய் தனில் உவந்து
கைப் பிடி எழுயெனும் மனம்
கைவிசை உள கொள் நிறை
கையடை எல்லை யறிந்து நிமிரும்.
நிமிர்ந்து நிற்கும் நிலை முதலடி
நிமிர்ந்த நடை உடை யெல்லாம்
தமிழினப் பகுதி பண் பாடலும்
இமியளவு குறியிடலும் கால்கோளவு முதலணியே.
முதல் அன்பசை விதிப் பார்வை
முதல் கருப்பொருள் பற்றும் புரதம்
முதல் இன பேச்சொலி உள்ளகம்
முதலெனப் படுவது நிலம் பொழுதிரண்டே.
பொழுது உணர் காலை மாலை
பொழுது இயல்பு வாழ்க்கை வரலாறு
பொழுது பெருநாள் நிற்கும் சிறு
பொழுது இருளதில் தூங்கி யெழுதலே.
எழுவாய் பயனிலை எனும் தலைமை
வழுவாத நடப்பு அமை விடத்து
தழுவல் சிறந்தது புணர்ச்சி வகை
நழுவாத பங்கிணை பல்லுயிர் பெருக்கம்.
பெருகும் வையக ஒன்றிய உயிரியம்
உருவக உரிமை உறைவிடப் பள்ளி
அரும்பு மலரும் மழலை சொல்
மருங்கின் முன்னிலை நெறிப் பெரும்பொழுது.
பெரும்பொழுது இளமுது வேனில் இரண்டிரண்டே
பெரும்பொழுது கார்கால ஆடிஆவணி இரண்டு
பெரும்பொழுது குளிர்கால புரட்டாசி ஐப்பசி
பெரும்பொழுது முன்பின் பனித்திங்க ளிரண்டிரண்டே.
இருவகைப் பிரிவும் தலைமை யகத்துரு
உருநிலை உரிய நேரத்து உறுப்பிலக்கணமே
தேருங் காலத்து மொழிபென உரிச்சொல்லே
தரும் நிலம் உடம்படு மெய்யே.