சுழளாதாரம் – மார்க்சின் மதிப்புரை


சுழளாதாரம் – மார்க்சின் மதிப்புரை:

பற்றாக் குறையால் பசி பட்டினி
      பற்றி யோர்க்கு எல்லை யோரமில்லை
போற்றும் தொழில் நுட்பம்  ஏற்றம்
      பற்றும் தலைமை அறிவும் உணர்வும்.

உணர்வு உண்டு உயிர் மெய்
     உணவு உண்ண பலநாள் கனவு
உண்டு களித் தோர் ஊரில்
       உண்டார் உண்டு உயிரக ஏய்ப்பு.

ஏய்த்து பிழை யூக்கி கொக்கியர்
     மாய்ந்து பாய்வர் ஏவல் கொள்வர்
சாய்ந்து படுக்கக் கூட இடமற்றோர்
       ஓய்ந்து உறவு கொள்ள துடிப்பர்.

துடிக்கும் நெஞ்சம் துவளும் உள்ளம்
     நடிக்கும் தலைமை அரசுப் பார்வை
கடிக்கும் எல்லைக் காவல் காப்பு
      படிக்கும் வாய்ப்பு பலருக்கு இல்லை.

இல்லா தோர் கொடுமை இது
      கல்லா தொரு கற்ற போராளி
உல்லாச பயணம் ஒரு சிலருக்கு மதிப்பு
      சல்லாபம் பண்ணி தலைமை பிடிப்பு.

தாங்கும் திறனே உழைப்பும் நேரமும்
       இங்கு வாழும் ஏழை பெண்டிர்
அங்கும் இங்கும் வீட்டில் வேலை
       ஏங்கும் உறவு ஏற்றத் தாழ்வு.

தாழ்வு நிலை தரணி எங்கும்
      வாழ்வு முறை கண்டோர் கொண்டோர்
ஊழ்வினை என ஊரெங்கும் பறை
      காழ்ப் புணர்ச்சி விதி மதிப்பு

மதிப்பு கூட்டி வரி விலக்கு
      நதி நீர்ப் பசை யுள்ளோர்க்கு
வேதி யியல் வேத வாக்கு
      நாதி யில்லார்க்கு தரணியே காப்பு.

காப்பு உரிமை கண்ட நிதி
       கோப்பு மாற்றி பதிவும் மாறும்
எப்படியோ  வாய்தரும்  ஆணை
       அப்படியே செல்லும் கண்டு பிடிப்பு.

பிடித்து படித்து கோகோ விளையாட்டு
      ஆடிப் பாடி களியாட்டக் கட்சி
நாடிச் சென்ற மாய ஏவுகணை
       ஓடிப் பிடித்து ஓயாத உழைப்பு.

உழை உயிர் வாழ வழியது
      மழை மண் பயிற்சி விளைபொருள்
தழை ஆடை உடுத்தும் வழக்கம்
       உடை உடுத்தி உடல் மறைக்கும்.

மறை பொருள் சேமிப்பில் திறன்
      உறை விடம் உண்ண உடை
இறை யியற்கை இயல்பில் பண்பு
     அறை யில்லாதோரே
கோடி கோடி.

Author: THANGAVELU CHINNASAMY

செயல் மன்ற பதிவர் - செ ம SEYALMANTRAM. 24 Subha Akila Nagar Airport TRICHY. TAMILNADU INDIA