வெண் தொண்டை மீன் கொத்தி
வெண் தொண்டை மீன் கொத்தி
விண்வெளிப் பறவை விலங்கின் வகையுண்டு
கண் அயர்ந்து சுவர் அருகே
ஊண் தேடித் தன் பொறியாலே.
பொறியியல் புலனறிவில் வானில் பறக்கும்
ஏறி இறங்கும் விரைவு விமானம்
பறித்து கொத்திக் கொண்டு செல்ல
கறித் துண்டு மீன் புழுத் தேடும்.
தேடித் தன் குஞ்சிற்கும் உணவளிக்கும்
பாடிப் பறந்த ஒலி பெருக்கி
வாடி நிற்கும் கொக்கு போன்றும்
தாடி வெண்மை நிறம் அழகு.
வழ வழப்பு மார்பக வெள்ளை
சுழண்டு விழ ஆணின காதல்
தொழ வேண்டிய நீள வாய்
அழகு கொண்டே இனம் பெருக்கும்.
திறன் பேசியில் மூலம் பலகணி வழியாக எடுத்த படமி ஆகும்.
“வெண் தொண்டை மீன் கொத்தி”